ட்ரெண்டிங்

சாலையில் படுத்திருந்தவர் மீது ஏறி இறங்கிய லாரி! 

சேலம் பூலாம்பட்டியில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் மதுபோதையில் சாலையின் நடுவே படுத்திருந்து ரகளையில் ஈடுபட்டவர் மீது அவ்வழியாக வந்த டேங்கர் லாரி, தலை மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி போதை ஆசாமி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பதும், அவர் மேட்டூர் தெர்மல் ஆலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தவர் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரவு பணியை முடித்துவிட்டு எடப்பாடி வந்த சங்கர், மது அருந்திவிட்டு சாலையின் நடுவே படுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் இரண்டு மூன்று முறை அப்புறப்படுத்திய போதும், தொடர்ந்து சாலையின் நடுவே படுத்து ரகளையில் ஈடுபட்டவர் மீது லாரி ஏறி இறங்கியது. 

இது குறித்து எடப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.