சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறையில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இந்த சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்த வரை 300- க்கும் மேற்பட்ட நர்சரி மற்றும் பிரைமரி, மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் அரசின் உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் ஜூன் 02- ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.



-hcTFAGMRGb.jpg)