சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் கணக்காளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடத்திற்கு வெளிக்கொணர்வு முகமையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்ததாவது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் இயங்கும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் 1 கணக்காளர் மற்றும் 1 இரவுக்காவலர் பணியிடத்திற்கு வெளிக்கொணர்வு முகமையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கணக்காளர் பதவிக்கு இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பு கல்வித் தகுதியாகவும், 1 ஆண்டிற்கு குறைவாகவும் மற்றும் புதியதாக பணியில் சேர்பவர்களுக்கு ரூபாய்15,000 வரையிலும், 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூபாய் 17,000 வரையிலும், 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூபாய் 20,000 வரையிலும், 10 ஆண்டிற்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூபாய் 25,000 வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.
இரவுக்காவலர் பதவிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி கல்வித் தகுதியாகவும், 1 ஆண்டிற்கு குறைவாகவும் மற்றும் புதியதாக பணியில் சேர்பவர்களுக்கு ரூபாய் 10,000 வரையிலும், 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூபாய் 12,000 வரையிலும், 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூபாய் 15,000 வரையிலும், 10 ஆண்டிற்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூபாய் 18,000 வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் புதிய கணக்காளர் மற்றும் இரவுக்காவலர் ஒப்பந்த அடிப்படையில் 1 வருடத்திற்கு மட்டும் வெளிப்புற ஆள் சேர்ப்பு நிறுவனம் மூலம் நியமனம் செய்யப்படுவர். மேற்படி, விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மேலாளர், சூரமங்கலம் நகர்ப்புர வாழ்வாதார மையம், அறை எண்.207. இரண்டாம் தளம். மாவட்ட ஆட்சியரகம். சேலம் என்ற முகவரியில் 15/04/2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


