ட்ரெண்டிங்

நீர்நிலைகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு!

தமிழகத்தில் ஆபத்தை உணராமல் சேறும், சகதியுமான நீர்நிலைகளில் குளிக்க சென்று உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 40- க்கும் மேற்பட்டவர்கள் நீர்நிலைகளில் மூழ்கி பலியாகியுள்ளனர். 

இது குறித்து சேலத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல அமைப்பினர் கூறுகையில், தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால் பல நீர்நிலைகள் வேகமாக வறண்டு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதுபோன்ற நீர்நிலைகளில் இறங்குபவர்களை சேறு உள்ளே இழுத்து மூழ்கடித்து விடும். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்டவர்கள், நீர்நிலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

எனவே, இதுப்போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க, அனைத்து நீர்நிலைகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களும், தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றனர்.