தமிழகத்தின் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இவரை நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சுமார் ரூபாய் 10.5 கோடியை கொடுத்து வாங்கியது.
தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி +0.589 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரராக உள்ள நடராஜன், நடந்து முடிந்த 7 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட விளையாடாதது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்டதால் போட்டியில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், டெல்லி அணிக்கு வலுசேர்க்கும் வகையில் குவாலிஃபயர் சுற்றில் கிரிக்கெட் வீரர் நடராஜன் களமிறக்கப்படலாம் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பல வீரர்களை கோடிகளை கொட்டி ஏலம் எடுத்தும், பல அணிகள், போட்டிகளில் பயன்படுத்தாமல் அழகு பார்த்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



-hcTFAGMRGb.jpg)