ட்ரெண்டிங்

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூபாய் 90 லட்சத்துக்கு விற்பனையான பருத்தி மூட்டைகள்!

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த வெள்ளரிவெள்ளி பகுதியில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனைக் கூடத்தில், பருத்தி விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது.  

அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 19) பருத்தி பொது ஏலம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளைக் கொண்டு வந்திருந்தனர். அதேபோல், கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் 3,145 பருத்தி மூட்டைகள் ரூபாய் 90 லட்சத்திற்கு ஏலம் போனது. 

ஏலத்தில் பருத்தி குறைந்தபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 6,900 முதல் அதிகபட்சமாக ரூபாய் 7,697 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை வர பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 100 வரை விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.