ட்ரெண்டிங்

லஞ்சம் வாங்கினால் சோதனை சாவடிகளில் லாரிகளை நிறுத்தி விடுவோம்- சண்முகப்பா எச்சரிக்கை!

 

மாநில எல்லைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், லஞ்சம் வாங்குவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

சேலத்தில் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 75- ஆம் ஆண்டு பவளவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, டீசல் விலையை ஐந்து ரூபாய் குறைப்பதாகவும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவதாகவும் அளித்த வாக்குறுதியை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கையூட்டு வாங்குவது குறித்து, பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இனி அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் வரும் டிசம்பர் 25- ஆம் தேதி முதல் லாரிகளை சோதனைச் சாவடிகளில் நிறுத்தி விடுவோம் என்றார்.