பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மற்றும் மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. என்று அறிவித்துள்ளார்
இது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் சுல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூபாய் 2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும், இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும். மேலும் கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கு (Renewal) அக்டோபர் 18- ஆம் தேதி முதல் செயல்பட துவங்கும், புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் மாணவர்களால் நவம்பர் 18- ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ (அறை எண்.110) அணுகலாம்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.


