கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த நிலையில் காணப்படுகிறது. இளநீர், தர்பூசணி, நுங்கு, பழச்சாறு ஆகியவற்றை பருகி பொதுமக்கள் சூட்டைத் தணித்து வருகின்றனர்.
அதேபோல், கடைவீதி, செவ்வாய்பேட்டை, அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மண்பானைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. விதவிதமான வடிவிலான மண்பானைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
மண்பானையில் சமையல் செய்தால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பழைய கற்காலத்திற்கும் இடை கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகிய சுமார் கி.மு.29000 ஆண்டுகளுக்கு முன்னால் மண்பானைகள் தோன்றியது. எந்த மாற்று உலோகப் பொருட்களும், பாத்திரங்களும் வருவதற்கு முன்னால் மண்பாண்ட பொருட்கள் பழக்கத்திற்கு வந்தன. உணவைச் சூடுபடுத்தி சுவையாக சாப்பிட ஆரம்பித்த காலத்தில் முதன் முதலில் உணவை பக்குவப்படுத்த மண்பாண்டங்களை உபயோகப்படுத்தினர்.
சமையல் செய்யும் உலோகப் பாத்திரங்களால் ஏற்படும் நச்சுத்தன்மை களிமண் பாத்திரங்களால் ஏற்படுவதில்லை. மண்ணில் உயிர்ச்சத்துக்கள் இருப்பதால் அதில் சமைக்கும் உணவில் சத்துக்கள் அனைத்தும் அப்படியே கிடைக்கும். மண்பானையில் செய்யப்படும் உணவின் சுவை கூடுவதுடன் உணவு கெட்டுப்போகாமலும் இருக்கும்.
மண்பானையில் உணவுகள் சமைக்கும் போது உணவு நீண்ட நேரத்திற்கு சூடாகவே இருக்கும். மண் பாத்திரங்களை உணவுப் பொருட்கள் சேமிப்பிற்கு பயன்படுத்தும் போது பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
மண் பாத்திரங்களில் காய்கறிகள், பழங்கள் சேமித்து வைப்பதால் அமிலத்தன்மை வராமலும் உயிர்ச்சத்து அழிக்கப்படாமலும் கிடைக்கிறது. மேலும், மண்பானை சமையலில் செய்து நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்றும் ஆய்வு தகவல்கள் நமக்கு கூறுகின்றனர்.
நவீன காலத்தில் வாழும் நாம் ஏன் மண்பானை சமையலை முன்னெடுக்கக் கூடாது? உங்களது பதிலை கீழே கமெண்ட் செய்யுங்கள்.


-SXgDfGgJfO.jpg)