ட்ரெண்டிங்

முள்ளுவாடி கேட் மேம்பாலப் பணிகள் நவம்பர் இறுதிக்குள் முடிவடையும்- எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.ப

 

சேலம் மக்களவைத் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்த தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ.ஆர்.பார்த்திபன், பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட சுமார் 1,18,000 கோரிக்கை மனுக்களை இன்று (அக்.31) காலை 11.00 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தை நேரில் சந்தித்து, பொதுமக்களின் மனுக்களை வழங்கினார். அத்துடன், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளார்

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., கடந்த நான்கரை ஆண்டுகளில் சேலம் மக்களவைத் தொகுதியில் சுமார் 6 லட்சம் மக்களை நேரில் சந்தித்துள்ளேன். கிராமம், கிராமமாகச் சென்று சுமார் 1,18,000 மனுக்களைப் பெற்று, அந்த மனுக்கள் மீது தீர்வுக் காணப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்தவொரு மக்களவை உறுப்பினரும் கிராமம், கிராமமாகச் சென்று மனுக்களை வாங்கியதாக வரலாறே இல்லை.

 

நீண்ட நாள் மற்றும் கடும் முயற்சியின் பலனாக சேலத்தில் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.சேலத்தில் இருந்து ஷீரடி மற்றும் திருப்பதிக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும்; முள்ளுவாடி கேட் மேம்பாலப் பணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் எனத் தெரிவித்துள்ளார்.