சென்னையில் நடைபெற்று வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2- வது பொதுக்குழுவில் பங்கேற்று பேசிய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சின்ன சின்ன பதவிகளுக்கு ஆசை கொள்ள வேண்டும். உயிரே...அன்பே உங்களை நான் உயரத்தில் வைத்துள்ளேன்; தோல்வி என்பது நிரந்தரமானது அல்ல; பிரதமர் பதவி என்பதும் நிரந்தரம் அல்ல.
வீரமும், நேர்மையும் இருக்கிறதா என என்னையே கேட்டுக்கொண்டவன் நான்; ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது; அது தவறு என்பது உலக அரசியலுக்கு தெரியும்; சாதித்துவிட்டேன் என்று கூறவில்லை; முடியும் என்று கூறுகிறேன். நான் 4 வயது முதல் மேடையை பார்த்து வருகிறேன்; என் வாழ்வோடு இருக்கிறது; அதனால் அரசியலில் இருக்கிறேன்.
ஜனநாயகத்தைக் காக்க வேண்டும்; இந்த பீடம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக் கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவிலேயே நேர்மையானது தமிழ்நாடு தான்; முறையாக வரிக் கட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)