ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்திற்கான வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்!


தமிழ்நாடு அரசின் 2025-26- ஆம் ஆண்டிற்கான வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையை இன்று (மார்ச் 15) சட்டப்பேரவையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

அதில், தமிழகத்தில் இருந்து 100 முன்னோடி விவசாயிகளை நெல் உற்பத்தித் திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல், பனை மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு முந்திரி வாரியம், சுவைதாளிதப் பயிர்களுக்கான சிறப்புத் திட்டம், பலா மேம்பாட்டு இயக்கம், வெண்ணைப் பழ சாகுபடி ஊக்குவித்தல் போன்ற அறிவிப்புகள் வெளியாகின. 

குறிப்பாக, சேலம் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். 

1. 63,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் சேலம் உள்பட 20 மாவட்டங்களில் ரூபாய் 22.80 கோடி மதிப்பீட்டில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும். 

2. ஊட்டச்சத்துள்ள வெண்ணைப் பழ சாகுபடியை சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திண்டுக்கல், தேனி தென்காசி ஆகிய மாவட்டங்களில் 500 ஏக்கரில் ஊக்குவிக்க ரூபாய் 69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்திற்கு புதிய குளிர் பதனக்கிடங்கு, மாம்பழக் கூழ் தொழிற்சாலை, சேகோ உற்பத்தியாளர்களுக்கான சலுகைகள், தென்னை மர விவசாயிகளுக்கான சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறாதது விவசாயிகள் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.