ட்ரெண்டிங்

கொசு ஒழிப்புப் பணிக்காக வாங்கப்பட்ட புதிய வாகனங்களின் செயல்முறையைப் பார்வையிட்ட மேயர்!

சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் 15-வது மத்திய, மாநில நிதிக்குழு மானியம் 2023- 2024 திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் நான்கு புதிய வாகனங்களின் இரட்டை குழாய் புகை தெளிப்பான் இயந்திரங்களின் செயல்முறையினை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் இன்று (செப்.09) காலை 10.00 மணிக்கு நேரில் பார்வையிட்டனர். இந்த நிகழ்வின் போது, மாநகர நல அலுவலர் யோகானந் மற்றும் மாநகராட்சியின் உயரதிகாரிகள், மண்டலக் குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தார். 

இந்த நான்கு புதிய வாகனங்களும் கொசு ஒழிப்புக்காகப் பயன்படுத்தப்படும்; இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தொடங்கவுள்ள நிலையில், சேலம் மாநகராட்சியின் மண்டலங்களுக்கும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும். கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இந்த வாகனம் மிகவும் உதவியாக இருக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். 

சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாப்பேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய மண்டலங்களுக்கு இந்த கொசு ஒழிப்பு வாகனங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.