ட்ரெண்டிங்

பொதுமக்களுடன் அமர்ந்து ஹாக்கி போட்டியைப் பார்த்து ரசித்த மாவட்ட ஆட்சியர்! 

7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை- 2023 விளையாட்டு போட்டி, ஆகஸ்ட் 3- ஆம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி வரை சென்னை இராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதையொட்டி, சேலம் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திறந்தவெளி திரையில் ஹாக்கி விளையாட்டுப் போட்டியினை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். 

இந்த நிகழ்வில், சேலம் மாவட்டக் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை இ.ஆ.ப., மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவாதி ஸ்ரீ இ.ஆ.ப., மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.