ட்ரெண்டிங்

பெரியார் பிறந்தநாள்- அரசியல் கட்சியினர் மரியாதை! 

தந்தை பெரியாரின் 146- வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். 

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சேலம் மாவட்டத் தலைவர் தமிழன் ஆ பார்த்திபன், பா.ம.க. சார்பில் எம்.எல்.ஏ. அருள் மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.