சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட 2- வது வார்டில் கடந்த மார்ச் 09- ஆம் தேதி அன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், மேட்டூர் நகராட்சி அலுவலகத்திற்கு இன்று (மார்ச் 11) நேரில் சென்ற பா.ம.க.வின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான சதாசிவம், நகராட்சி ஆணையாளரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, மேட்டூர் நகராட்சிப் பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் விநியோகத்தை சீராக வழங்க வேண்டும், பொதுமக்களுக்கு குடிநீர் சார்ந்த எந்த ஒரு பிரச்சனைகளும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையாளர் உறுதி அளித்தார்.


