சேலம் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான இடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனுமதி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப. முன்னிலையில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜன.10) நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான இடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனுமதி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன் இன்றைய தினம் நடத்தப்பட்டது. பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திடும் வகையிலும், கடந்த கால நிகழ்வுகளை கருத்திற்கொண்டும் இவ்விடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
இக்கூட்டத்தில், மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்காக காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி இ.ஆ.ப., மாநகர காவல் துணை ஆணையர் வேல்முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, லோகநாயகி, பிரியதர்ஷினி உள்ளிட்ட வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


