ஆன்மிகம்

சேலத்தில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் மின்சாரப் பேருந்துகள்!

சேலம் மாவட்டத்தில் மின்சாரப் பேருந்துகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

 

சுற்றுச்சூழல் மாசுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் வாகன உறுதியைக் குறைத்துள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள், மின்சார வாகன தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். மின்சார வாகனங்களை உற்பத்திச் செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து, அதனை செயல்படுத்தி நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில், மத்திய அரசு பிரதமர் இ-பேருந்து சேவா என்றத் திட்டத்தைத் தொடங்கி, நாடு முழுவதும் மின்சாரப் பேருந்துகளின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் பொதுப்போக்குவரத்திற்கு இன்றியமையாததாக பேருந்துகள் திகழும் நிலையில், அதனை மின்சார பேருந்துகளாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தின் சேலம், கோவை, திருச்சி, மதுரை, ஆவடி, அம்பத்தூர், வேலூர், தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர் ஆகிய 10 நகரங்கள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் மத்திய அரசு, மின்சார பேருந்துகளை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக, 5 முதல் 10 லட்சம் மக்கள் வரை வசிக்கும் நகரங்களை மையமாகக் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

 

மத்திய அரசு வழங்கவிருக்கும் மின்சார பேருந்துகள், 10 கி.மீ. முதல் 20 கி.மீ. தொலைவிற்கு உட்பட்ட மாநகர பேருந்துகளாக மட்டுமே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.