ட்ரெண்டிங்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 10,000 கனஅடியை நெருங்குகிறது!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 10,000 கனஅடியை நெருங்குகிறது! 

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 10,000 கனஅடியை நெருங்குகிறது. 

தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து வினாடிக்கு 12,500 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், ஓகேனக்கலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

அதேபோல், இன்று (ஆகஸ்ட் 18) காலை 08.00 மணி நிலவரப்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 9,394 கனஅடியில் இருந்து 9,938 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.50 அடியாகவும், நீர்இருப்பு 20.08 டி.எம்.சி.யாகவும் உள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீரை 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றிற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.