ட்ரெண்டிங்

சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை- டிக்கெட் முன்பதிவு விறு

சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமான சேவையைத் தொடங்குவதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில், சேலம் விமான நிலையத்தை உதான் 5.0 திட்டத்தின் கீழ் இணைத்துள்ளது.

 

அதன்படி, வரும் அக்டோபர் 16- ஆம் தேதி முதல் கொச்சின்- சேலம்- கொச்சின், பெங்களூரு- சேலம்- பெங்களூரு ஆகிய வழித்தடத்தில் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கவுள்ளது.

 

இந்த வழித்தட விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியுள்ளது. அதன்படி, சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கும், சேலத்தில் இருந்து கொச்சினுக்கும் ரூபாய் 1,999 கட்டணமாக அலையன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. எனினும் முதல் 35 இருக்கைகளுக்கு உதான் திட்டம் 5.0- ன் கீழ் ஒரு கட்டணமும், அதன் பிறகு மற்ற இருக்கைகளுக்கு கட்டணம் மாறுபடும், அதேபோல், முன்பதிவுச் செய்யும் நாட்களுக்கு ஏற்றவாறு கட்டணம் மாறுபடும்.

 

டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது. விமான பயண டிக்கெட் மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு அலையன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் https://allianceair.in/book என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.