ட்ரெண்டிங்

சிறுமிக்கு ஆண் குழந்தை- கணவர் மீது பாய்ந்தது போக்சோ!

 

சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகாவைச் சேர்ந்தவர் தறித்தொழிலாளியான மோகன்ராஜ் (வயது 25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். அதற்கு சிறுமியின் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதனால் மோகன்ராஜ் அந்த சிறுமியை, கடந்த 2023- ஆம் ஆண்டு நவம்பர் 20- ஆம் தேதி அழைத்துச் சென்று திருமணம் செய்துக் கொண்டார். 

 

தனியாக வீடு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சிறுமிக்கு, நேற்று (ஜன.17) வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை மோகன்ராஜ் சிகிச்சைக்காக, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளார். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து மேட்டூர் அரசு மருத்துவமனை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் கார்த்திகேயினி, எஸ்.எஸ்.ஐ. மீனா ஆகியோர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக மோகன்ராஜ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர்.