ஆன்மிகம்

யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது மஹா கும்பாபிஷேக விழா! 


சேலம் 2-வது அக்ரஹாரத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற அருள்மிகு லட்சுமி நாராயண சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 12- ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 

இதற்கான யாகசாலை பூஜைகள் இன்று (ஜூலை 10) தொடங்கியுள்ளது. வரும் ஜூலை 12- ஆம் தேதி அதிகாலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளன. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. 

வரும் ஜூலை 12- ஆம் தேதி அன்று காலை 08.30 மணி முதல் 09.00 மணிக்குள் கோயிலின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 05.00 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறவுள்ளது. பின்னர், இரவு 08.00 மணிக்கு வெள்ளிக் கருட வாகனத்தில் உபய நாச்சியார்களுடன் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.