ட்ரெண்டிங்

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைய வேண்டும்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வலி

ஆப்கனிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைய வேண்டும் என்று இந்தியா தலைமையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுடெல்லி பிரகடனம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஆப்கனிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய நாடுகள் பங்கேற்பாளர்களாகவும், அசர்பைஜான், அர்மீனியா, கம்போடியா, நேபாள், துருக்கி, இலங்கை ஆகிய நாடுகள் கலந்துரையாடல் மேற்கொள்பவர்களாகவும் இணைந்துள்ளன.

இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நேற்று நிறைவடைந்தது. இதில், ஆப்கனிஸ்தான் தொடர்பான பிரகடனம் அறிவிக்கப்பட்டு அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. அதில், "ஆப்கனிஸ்தானின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. ஆப்கனிஸ்தானில் அனைத்து இனக் குழுக்கள், மதக் குழுக்கள், அரசியல் குழுக்களையும் கொண்ட அரசு அமைவது மிகவும் முக்கியம் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கருதுகிறது; அது நிகழ அழைப்பு விடுக்கிறது. ஆப்கன் மக்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடர்ந்து உதவும்.