அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூபாய் 520, ரூபாய் 555, ரூபாய் 755 பிரீமியத்தில் ரூபாய் 10 லட்சம் மற்றும் ரூபாய் 15 லட்சம் மதிப்பு விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, ஆண்டிற்கு ரூபாய் 899 பிரீமியத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள மருத்துக் காப்பீட்டு திட்டத்தையும்
அறிமுகப்படுத்தியுள்ளது.
சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்கள் சென்றடையும் நாட்டில் உள்ள அஞ்சலகங்கள் (தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம் மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விண்ணப்ப படிவம். அடையாள முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட்போன் விரல் ரேகை மூலம் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.
தற்போது காப்பீடு செய்யப்படாத வாடிக்கையாளர்கள் சேரலாம். ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மருத்துவக் காப்பீட்டில் சேர முடியும். எனவே அனைத்து பொதுமக்களும், ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தபால் நிலையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம் மூலமாக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகவலை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


