ட்ரெண்டிங்

தேர்தல்களில் தொடர் தோல்வி....மனம் தளராமல் மீண்டும் மீண்டும் வேட்பு மனு....யார் இந்த தேர்தல் மன்

 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்தல் பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

 

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (ஜன.10) தொடங்கியது. இன்னும் முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில் முதல் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இந்தநிலையில் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் தனது 247வது முறையாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகிலுள்ள ராமன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டயர் கடை உரிமையாளரான பத்மராஜன். 1959- ஆம் ஆண்டு ஆத்தூரில் பிறந்த இவர் தனது 30 வயதில் தொடங்கி தற்போது வரை இந்தியாவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகிறார். குறிப்பாக 34 ஆண்டுகளில் 6 குடியரசுத் தலைவர் தேர்தல், 6 துணை குடியரசுத் தலைவர் தேர்தல், 5 பிரதமர் தேர்தல் உட்பட 246 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

 

குறிப்பாக, இவர் கடந்த 2023- ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது 7 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.