ட்ரெண்டிங்

ஜன.22- ஆம் தேதி மட்டும் ரூபாய் 168.83 கோடி வருவாய்-பத்திரப்பதிவுத் துறை தகவல்!

 

தை பொங்கலுக்கு பின்வரும் நாட்களில் பதிவுத்துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ஜனவரி 31- ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை உறுதிச் செய்யும் வகையில், நேற்றைய தினம் மட்டும் அதாவது ஜனவரி 22- ஆம் தேதி அன்று மட்டும் 21,004 ஆவணங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு 168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 

 

புதிய கூட்டு மதிப்பின் அடிப்படையின் கீழ் ஜனவரி 22- ஆம் தேதி அன்று சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும், அதன்மூலம் பெறப்பட்ட ரூபாய் 12 கோடி வருவாயும், இதில் அடங்கும். இனி வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.