சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தேங்கிய ரசாயன கழிவுநீர் 16 கண் மழைக்கால வெள்ள நீர் போக்கியில் வடிந்து தேங்கியிருப்பதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை காவிரியில் வெளியிட்டு வருவதால் மேட்டூர் அணை நீர் மற்றும் நீர்த்தேக்கங்களில் ரசாயன கழிவுகள் தேங்கி வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மேலும் தண்ணீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. தண்ணீர் மாசு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேட்டூர் காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


