ட்ரெண்டிங்

மின் கணக்கீடு குறைகளைச் சரி செய்ய சிறப்பு முகாம்!


சேலம் மாவட்டம், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, இடைப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின் கணக்கீடு குறைகளைச் சரி செய்திட நாளை மறுநாள் (ஏப்ரல் 05) சிறப்பு முகாம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தாரணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, இடைப்பாடி மின்கோட்ட அலுவலகங்களில் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடக்கின்றது. 

அன்றைய தினம் காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடக்கும் இம்முகாமில் மின் பயனீட்டாளர்கள், தங்களது மின் இணைப்பின் கணக்கீட்டில் உள்ள குறைபாடுகள்,மின் அளவி குறைபாடு, குறைந்த அழுத்த குறைபாடுகள் மற்றும் பழுதான மின் கம்பங்கள் குறித்த தகவல்களை தெரிவித்து முறையிடலாம். இத்தகைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள இம்முகாமில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.