ட்ரெண்டிங்

மக்கள் நீதிமன்றத்தில் 210 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது!

தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதல்படி, இன்று (அக்.14) சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்திலும் மற்றும் சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் முதலிய தாலுக்கா நீதிமன்றங்களிலும், குறிப்பிட்ட சட்டம் தொடர்பான மக்கள் நீதிமன்றம், குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்குகள் மற்றும் பிற துணை விவகார வழக்குகளுக்காக நடைபெற்றது.

சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி தலைமையிலும், ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜின் ஒருங்கிணைப்பிலும், மாவட்டம் முழுவதும் 8 அமர்வுகளில் 421 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது.  

இதில், 210 வழக்குகளுக்கு தீர்வுக் காணப்பட்டு 9,52,77,260 ரூபாய் சம்மந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.