பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழுவுக்கான புதிய வழிகாட்டுதல்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நபர்களை பல்கலைக்கழகங்களில் புகுத்துவதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கல்வி உரிமைகளை பறிக்கின்ற பல்கலைக்கழகத்தின் மானிய குழுவான யுஜிசியின் அறிவிப்பினை திரும்பப் பெற வலியுறுத்தியும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் பவித்ரன் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் சமசீர் அகமது கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை நிர்வாகிகள் கோகுல், டார்வின், மாவட்ட குழு உறுப்பினர்கள் செல்வம், அகிலாண்டேஸ்வரி, நவீன், திவ்யா உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



