ட்ரெண்டிங்

சேலம் கலெக்டர் பங்களா முன்பு சமூக ஆர்வலர் தர்ணா போராட்டம் !

 

சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள கலெக்டர் பங்களா முன்பு சமூக ஆர்வலர் குறைதீர்க்கும் முகாமில் உரிய மரியாதை வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு !

சேலம் அஸ்தம்பட்டி ஹவுசிங் போர்டு மகேந்திரபுரி பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் 50, இவர் தேசிய சீர்திருத்த இயக்கத்தின் தலைவராக உள்ளார்.

கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஜெயசீலன் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று அதிகாரிகளிடம் புகார் கூறினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் இன்று காலை சேலம் கோரிமேட்டில் உள்ள கலெக்டர் பங்களா முன்பு ஜெயசீலன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் எனவும் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறினர்.

அதனைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக நடைபெற்ற தர்ணா போராட்டத்தை ஜெயசீலன் கைவிட்டார்.

இதுகுறித்து ஜெயசீலன் கூறியதாவது,

மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் அதிகாரிகள் எல்லாம் பொது மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நபர்கள்.எனவே பொதுமக்களின் குறைகளை கேட்கும் போது அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.தற்போது பொதுமக்களுக்கு உரிய மரியாதை கொடுத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை எடுத்து தற்காலிகமாக என்னுடைய போராட்டத்தை கைவிட்டு உள்ளேன்.தொடர்ந்து இதுபோன்ற புகார்கள் இருப்பின் போராட்டத்தை தொடர்வேன் என தெரிவித்தார்...