சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக செல்லும் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக புகையிலை போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், நெடுஞ்சாலை ரோந்து மற்றும் சோதனைச்சாவடி காவல்துறையினருடன் இணைந்து மாவட்ட எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கார், காவல்துறையினரைப் பார்த்ததும், தப்பி முயன்றபோது மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது, காருக்குள் இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலைப் பொருட்களையும், கடத்தல் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர், தப்பியோடிய நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



