ட்ரெண்டிங்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் அசத்தல் — 94.21% தேர்ச்சி பதிவு!

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டம் 94.21 சதவீத தேர்ச்சி பெற்று குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

மாவட்டம் முழுவதும் உள்ள 518 பள்ளிகளில் இருந்து 20,333 மாணவர்கள் மற்றும் 20,090 மாணவிகள் என மொத்தம் 40,423 பேர் தேர்வெழுதியிருந்தனர். இதில் 38,081 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களில் 18,755 பேரும், மாணவிகளில் 19,326 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் 96.20 சதவீதம் பெற்று முன்னிலை வகித்துள்ள நிலையில், மாணவர்கள் 92.24 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவிலான தேர்ச்சி பட்டியலில் சேலம் மாவட்டம் 22வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள 188 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

அரசுப் பள்ளிகளிலும் இந்த ஆண்டு சிறப்பான தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. 296 அரசு பள்ளிகளில் இருந்து 23,515 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 21,815 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 92.77 சதவீதமாகும்.

அதில் மாணவர்கள் 90.1 சதவீதமும், மாணவிகள் 95.1 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகித அடிப்படையில் தமிழக அளவில் சேலம் மாவட்டம் 20வது இடத்தை பெற்றுள்ளது. மேலும், 69 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.

இந்த தேர்ச்சி முடிவுகள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.