ட்ரெண்டிங்

ஒரே நாளில் ரூபாய் 50 லட்சத்துக்கு விற்பனையான பருத்தி மூட்டைகள்!

ஒரே நாளில் ரூபாய் 50 லட்சத்துக்கு விற்பனையான பருத்தி மூட்டைகள்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் கோனேரிப்பட்டிக் கிளையின் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் நேற்று (ஆகஸ்ட் 16) பருத்தி ஏலம் நடைபெற்றது.

கோனேரிப்பட்டி, அம்மாப்பேட்டை, தேவூர், காவேரிப்பட்டி, குருவரெட்டியூர், குள்ளம்பட்டி, வட்ராம்பாளையம், பூமணியூர், மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், அண்டை  மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பருத்தி மூட்டைகளை ஏலத்தில் கொண்டு வந்திருந்தனர்.

இந்த பருத்தி மூட்டைகளை வாங்குவதற்காக, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

நாள் முழுவதும் பருத்தி ஏலம் நடைபெற்ற நிலையில், சுமார் 1,900 பருத்தி மூட்டைகள் ரூபாய் 50 லட்சத்துக்கு விற்பனையானது. இதில், பி.டி. ரகப் பருத்திக் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 6,369 முதல் ரூபாய் 7,592 வரை ஏலம் போனது. கடந்த சில வாரங்களாக பருத்தி மூட்டைகளுக்கு நல்ல விலை கிடைப்பதாக பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.