ட்ரெண்டிங்

தி.மு.க. அரசு மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு! 


சேலம் எடப்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; ஆனால் ஆளும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும்.

அ.தி.மு.க. தலைவர்களின் படத்தை வைத்தால்தான் ஓட்டு கிடைக்கும் என எதிரணியினர் முயற்சி பெருமையாக உள்ளது. சட்டசபையில் நாடகத்தை அரங்கேற்றி மக்கள் மத்தியில் அனுதாபத்தை தேடுபவர்கள் நாங்கள் அல்ல. சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதை விட வேறு என்ன உள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தை சட்டசபையில் 56-ன் விதியின் கீழ் விவாதிக்க மறுப்பது ஏன்? கள்ளக்குறிச்சி விவகாரம் அவை குறிப்பில் பதிவாகிவிடும் என்பதற்காகவே இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் இந்த பிரச்சனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவே அ.தி.மு.க. உண்ணாவிரதம் இருந்தது. 

நீட் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பேசாமல் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள். நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் காவேரி நதிநீர் பிரச்சனையை அணுகியது போல நீட் தேர்வு பிரச்சனையை அணுகியிருப்போம்.

நீட் தேர்வு குறித்து தமிழ்நாட்டில் பேசி என்ன பயன்; கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் என்ன செய்தார்கள். தற்போது புதுச்சேரி உள்பட 40 தி.மு.க. கூட்டணி உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றுள்ளனர்; இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதனையும் பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.