ட்ரெண்டிங்

சேலத்தில் குவிந்த கலைஞர்கள்...களைகட்டிய நாட்டுப்புற கலைத் திருவிழா!

 

பொங்கல் திருநாளை முன்னிட்டு, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் சாதிப்போர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய நாட்டுப்புறக் கலை மீட்புத் திருவிழா 2025 நேற்று (ஜன.07) பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் தொடங்கி இரண்டாவது மற்றும் இறுதி நாளான இன்றும் (ஜன.08) வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 

நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சிறப்பு விருந்தினர்கள் கண்டுகளித்தனர். பாரம்பரிய கலைகள், நடனங்கள் திருவிழாவில் இடம் பெற்றிருந்தனர். 

 

திருவிழாவில் சேலம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு அரங்கில் இருந்தவர்களை உற்சாகப்படுத்தினர். திருவிழாவில், பாரம்பரிய வாத்தியங்களும் இடம் பெற்றிருந்தனர். 

 

திருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகளை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற திருவிழாவில் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.