தமிழக முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜரின் 122- வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் கொண்டலாம்பட்டி பைபாசில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 2020- ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்தபோது மத்திய அரசு காலை உணவுத் திட்டத்தை புதிய கல்விக் கொள்கையின் ஊக்குவித்து உள்ளனர். இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் என்பது பிரதமர் மோடியின் எண்ணம்.
அதற்கான நிதியும் மத்திய அரசு கொடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக புதிய கல்விக் கொள்கையில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டத்தை மாநில அரசு முழுமையாக நிறைவேற்ற ஆரம்பித்தால், அதற்கான நிதி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் தமிழக அரசு விகண்டாவாதமாக புதிய கல்விக் கொள்கையை ஏற்று கொள்ள மாட்டோம்.
காலை உணவு திட்டம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்; இதில் அரசியல் செய்யக்கூடாது. இதில் மாற்றுக் கருத்தும் இல்லை, யார் கொண்டு வந்தாலும் மக்களுக்கு பயன்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் திராவிட மாடல் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. காலை உணவு திட்டம் மட்டுமில்லாமல் மதிய உணவு திட்டம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் குழந்தைகளுக்கு சத்தான உணவுக் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை வெளியிட்டுள்ள சிசிடிவி உண்மைதான். காட்சிகளில் வந்த நபர்களின் புகைப்படத்தை வைத்து குற்றவாளிகளை இவர்கள் தான் குற்றவாளி என்று சொல்லி உள்ளார்கள் என்பது உண்மைதான். ஆனால் கூலிப்படை ஏவிவிட்டது யார்? இதற்கு உதவியாக இருந்தது யார்? இதற்கு மூளையாக இருந்தவர் யார் என்பது குறித்து இதை கண்டுபிடிக்க வேண்டும். திருவேங்கடத்தை என்கவுன்ட்டரில் கொன்ற நிலையில் திருவேங்கடத்தை ஏவிவிட்டவர் யார்? திருவேங்கடம் சொல்ல வந்த உண்மை என்ன? என்பது குறித்து தெரிய வேண்டும்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் மரணமா? அல்லது வேறு ஏதாவது மரணமா? என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் சரணடைந்த ஒருவர் ஏன் தப்பியோட வேண்டும், கையில் துப்பாக்கி வந்தது எப்படி உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் உள்ளது. திருவேங்கடம் ஒரு குற்றவாளி என்பதை ஏற்றுக் கொள்கிறோம்; திருவேங்கடத்திற்கு பின்னால் உள்ளது யார் என்பதை தான் எங்களுடைய கேள்வி எனத் தெரிவித்துள்ளார்.


