ட்ரெண்டிங்

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்!

சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் பாரதி நகரில் இன்று (ஜன.03) நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி 5வது தெருவில் ரூபாய் 19.70 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், பாரதி நகரில் ரூபாய் 10.60 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், காமராஜர் நகரில் ரூபாய் 19 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைத்தல், பாமன் கரடு பகுதியில் ரூபாய் 7.85 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம். 

மேலும், மஞ்சுளாம்பள்ளம் தார் சாலை முதல் ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைத்தல், பாமன் கரடு நூலக மையத்தில் ரூபாய் 25.63 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைத்தல், காமராஜ் நகரில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைத்தல் மற்றும் வெள்ளக்கல்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுற்றுச்சுவர் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல்,வெள்ளக்கல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய புதிய கான்கிரீட் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம்.

இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.