ட்ரெண்டிங்

நாடாளுமன்றத்தில் களேபரம் ஏன்?- திருச்சி சிவா எம்.பி. பேட்டி! 

அண்ணல் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை கருத்தால் நாடாளுமன்ற வளாகம் களேபரமானது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த அம்பேத்கர் மீது அனைத்துக் கட்சியினருக்கும் மரியாதை உண்டு. அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியதால் மனம் புண்பட்டுள்ளது. 

நாடாளுமன்றம் வெளியே தெருச்சண்டை போன்ற சூழலை பா.ஜ.க.வினர் உருவாக்கினர். உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும். அமித்ஷாவிடம் இருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை எதிர்ப்பார்க்கவில்லை" எனத் தெரிவித்தார்.