ட்ரெண்டிங்

சேலத்தில் நீர் ஏற்றும் பணி- துரித நடவடிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (பிப்.13) பேரவையில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம், ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய இடங்களில் நீர் ஏற்றம் செய்வதை விரைவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், நீர் ஏற்றம் செய்யும் பணியை விரைவாகத் துரிதமாக இந்த அரசு செய்துக் கொடுக்கும் என்றார். 

அதைத் தொடர்ந்து, பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து உரிய நீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், விவசாயிகள் பயிரிட்டுக் கொண்டே இருந்தால் நீர் திறந்து விட்டுக்கொண்டே இருக்க முடியாது; மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீர் குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.