ட்ரெண்டிங்

தீபாவளி நெருங்கும் நிலையில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு!

 

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெல்லம் உற்பத்தி அதிகரித்திருப்பதுடன் விலையும் அதிகரித்திருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, காமலாபுரம், போட்டியபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள ஆலைகளில் வழக்கமாக நாள்தோறும் 50 முதல் 60 டன் அளவிற்கு வெல்லம் உற்பத்திச் செய்யப்படும். ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தேவையைக் கருத்தில் கொண்டு உற்பத்தி அதிகரித்திருப்பதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

30 கிலோ எடைக் கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் 1,350 ரூபாய் வரை விற்பனைச் செய்யப்படுகிறது. கடந்த வாரத்தை விட ஒரு சிப்பத்திற்கு 100 ரூபாய் விலை அதிகரித்திருப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.