பாலியல் புகார்களால் மலையாளத் திரையுலகம் ஆட்டம் கண்டுள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், தமிழகத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பது இல்லை எனக் கூற முடியாது; காலங்காலமாக புகார்கள் இருக்கிறது; பெண் நடிகைகளிடம் யாராவது அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டால் காலணியால் அடிங்க. அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டால் காலணியால் அடிக்கும் துணிச்சல் வர வேண்டும்.
தற்போது, தமிழகத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் புகார்கள் எதுவும் இல்லை; 10 பேர் கொண்ட குழு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அட்ஜஸ்ட்மெண்ட் புகார்கள் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மலையாளத் திரைத்துறையில் நடந்திருப்பது தவறு; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் சினிமாவில் உப்புமா நிறுவனத்தினர் தான் பெண்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்கின்றனர் என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.



-SXgDfGgJfO.jpg)