சபரிமலை சீசனைத் தொடர்ந்து, பக்தர்களின் வசதிக்காக சேலம் வழியாக சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது சேலம் ரயில்வே கோட்டம்.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம்- பெங்களூரு இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சேவை வரும் நவ.12- ஆம் தேதி முதல் ஜன.29- ஆம் தேதி வரை இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயில் சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது



-hcTFAGMRGb.jpg)