ட்ரெண்டிங்

சேலத்தில் 2-வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் !

சேலம், ஜூன் 30: 

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் சேலம் டிஸ்ட்ரிக் கார்ப்பரேஷன் முனிசிபல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தை மாரிமுத்து தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு, தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடைமுறையை கைவிட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

போராட்டம் 2-வது நாளாக நீடித்ததால், சேலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளன. இதனால் பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.