ட்ரெண்டிங்

போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு எம்.எல்.ஏ. அருள் கடிதம்!

 

பேருந்து முன்பதிவு வசதி தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கடிதம் எழுதியுள்ளார். 

 

அந்த கடிதத்தில், சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் தொழில் நிமித்தமாகவும், சொந்த வேலைக்காகவும் வந்து செல்லும் பேருந்து நிலையம் ஆகும். பண்டிகைக்காலங்களில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் வருகை தருவது வழக்கம்.

 

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து செல்ல போதிய பேருந்துகள் உள்ளது.

 

அதேபோல் பண்டிகைக்காலங்களில் சேலத்திலிருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் அருகாமையில் உள்ள பெருநகரங்களுக்கு முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள போதிய வசதிகள் இல்லாததால் பண்டிகைக்காலங்களில் பேருந்து பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், வயதான பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சேலத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை ஆகிய ஊர்களுக்கு முன்பதிவு வசதி ஏற்படுத்தி கொடுத்து உதவிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.