ட்ரெண்டிங்

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் போராட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் போராட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. 

மாணவர்களை மட்டுமின்று, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்துச் செய்யாத மத்திய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.