தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க ஏதுவாக வரும் அக்.27- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தீபாவளி வரும் அக்.31-ம் தேதி கொண்டாடப்படுவதாலும், அன்றைய தினம் மாத இறுதி நாளாக இருப்பதாலும் அரிசி மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (அக்.27) அன்று செயல்படும்.
ஆதலால் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை அன்றைய தினம் சென்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இந்த விடுமுறை நாளில் பணியாற்றுவதற்கு ஈடாக வரும் நவ.16- ஆம் தேதி சனிக்கிழமை அன்று பொது விநியோகத் திட்ட கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


