ட்ரெண்டிங்

 ஐஸ் பாக்ஸ் தர்பூசணி சாகுபடி அதிகரிப்பு! 

சேலம் மாவட்டம். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஐஸ் பாக்ஸ் தர்பூசணி சாகுபடி அதிகரித்துள்ளது. 

பைத்தூர் கிராமத்தில் 100 ஏக்கருக்கும் மேல் வீரிய ரக தர்பூசணி சாகுபடி செய்து விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். 60 நாட்களில் அறுவடை செய்யப்படும் இந்த தர்பூசணி 2 முதல் 5 கிலோ வரை எடைக் கொண்டதாக இருக்கிறது. 

நிலப்பூர்வை என்னும் முறையில் தண்ணீர் பாய்ச்சுவதால், இந்த வகை தர்பூசணி சாகுபடிக்கு தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது. ஏக்கருக்கு அதிகபட்சமாக 20 டன் வரை விளைச்சலும் கிடைக்கிறது. வெயிலின் தாக்கம் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஐஸ் பாக்ஸ் தர்பூசணி விலையும் அதிகரித்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.