ட்ரெண்டிங்

சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 

சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் பிப்ரவரி 16, மார்ச் 01, 15, 29 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து திப்ருகருக்கும், மறுமார்க்கத்தில் வரும் பிப்ரவரி 21, மார்ச் 06, 20, ஏப்ரல் 03 ஆகிய தேதிகளில் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரிக்கும் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 

 

இந்த சிறப்பு ரயில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.