ட்ரெண்டிங்

மயிலாடுதுறை- சேலம் புதிய ரயில் சேவை தொடக்கம் - இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!

மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று (ஆகஸ்ட் 28) முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை- திருச்சி, திருச்சி- கரூர், கரூர்- சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே ரயில் சேவையாக இயக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த ரயில் சேவை இன்று (ஆகஸ்ட் 28) காலை தொடங்கியதால், ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டார். மயிலாடுதுறையில் இருந்து காலை 06.20 மணிக்கு புறப்படும், இந்த ரயில் பிற்பகல் 01.45 மணிக்கு சேலம் வந்தடைகிறது. மறுமார்க்கமாக, சேலத்தில் மதியம் 02.05 மணிக்கு புறப்பட்டு இரவு 09.40 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. இந்த ரயில் சேவை தினசரி ரயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.